மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday 4 November 2017

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் தீவிர சோதனை



நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு  நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுதீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கவும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணியில   ஈடுபட்டு உள்ள போலீசாருடன் கூடுதல் போலீசார் அங்குபணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

 கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்வதற்கு ஏற்கனவே பிரதான வாசல்கள் உள்பட மொத்தம் 10 வழிகள் இருந்தனஇதில் 3 வழிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர்   இணைந்து அடைத்து விட்டனர்பிரதான வாசல் மற்றும் தபால் அலுவலகம் அருகே உள்ளவாசல்களின் வழியாக மட்டும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார்  அனுமதித்து வருகிறார்கள்இந்த 2 வாசல்களிலும்பாளையங்கோட்டை உதவி போலீஸ்   கமிஷனர் விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment