மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Sunday 12 November 2017

காரியாண்டி அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு மாணவ மாணவிகளின் பேரணி



நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட காரியாண்டி அரசு பள்ளியில் திருநெல்வேலி ரோட்டரி கழகம்  பொதுமக்களுக்கு  டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த  மாணவ மாணவிகளின் பேரணி நடைபெற்றது. 

 இந்த ஊர்வலம் காரியாண்டி நகரின் முக்கிய சாலைகளுக்கு சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் மாணவ மாணவிகளின் கோஷத்துடன் சென்றது.


இதை தொடர்ந்து அப்பள்ளி மாணவ ,மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல்  இடம் பெற அறிவுறுத்த பட்டது.  தொடர்ந்து திருநெல்வேலி ரோட்டரி கழகத்தின் சார்பில் மாணவ ,மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி கைடுகள் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் காந்தி, உதவி தலைமையாசிரியர் சுந்தரகுமார், திருநெல்வேலி ரோட்டரி கழக நிர்வாகிகள் சொக்கலிங்கம்ஆவுடையப்பன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தி மற்றும் படம் 
திரு. பரமசிவன்.

No comments:

Post a Comment