மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday 16 November 2017

உலக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தினம்




உலக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நெல்லையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நெல்லையில் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழ்நாடு  உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக மாநில துணைத்தலைவர் பரமசிவம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேனிலைப்பள்ளியில் பாரதியார் பயின்ற பள்ளி வகுப்பறையில் மாணவ-மாணவிகளுக்கு பத்திரிகையாளர்களின் பணியின் முக்கியத்துவம், பாரதியார் பத்திரிகையில் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது. 

தமிழ்நாடு  உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பரமசிவம் கூறியதாவது... தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். புத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசின் ஓய்வுதிய பலன்கள்,அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பரமசிவம், தென்மண்டல அமைப்பு செயலாளர் பாரதிராஜன், நெல்லை மாவட்ட தலைவர் முருகன், வணக்கம் இந்தியா சங்கரகுற்றாலம்,மாலை முரசு டிவி செல்வம், தினச்சூரியன் செல்வம், மாலைதமிழகம் சுப்பிரமணியன், ஈநாடு நெல்லை முத்து, மயூரி டிவி ஹரி, விண் டிவி சரவணன், வெளிச்சம் டிவி ரீட்டாஅருள், உட்பட பத்திரிகையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம் 
திரு.முத்து.


No comments:

Post a Comment