மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday 4 November 2017

நெல்லையில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா.




திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரிதலைமையில் (01.11.2017) நடைபெற்றது

இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி   கலந்துகொண்டு 584 மாணவிகளுக்கு ரூ.72.42 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

 விழாவில்ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத்துறை  அமைச்சர் பேசியதாவது 

 தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துபல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.   தமிழக குழந்தைகள்   சிறந்த கல்வி  பயில புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்அவர்கள் சத்துணவு திட்டத்தினை கொண்டு  வந்தார்கள்அதைப்போலவேமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விலையில்லா சைக்கிள்புத்தக பைஜாமின்ட்ரி பாக்ஸ்கலர் பென்சில்,சீருடைகாலணி உள்ளிட்ட 14  வகையான நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டார்கள்ஏழை,எளிய மாணவமாணவியர்களின் எட்டா கனியாக இருந்த மடிக்கணினியினை    தமிழக    மாணவர்கள்  கணினி   அறிவு பெற்றுசிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக விலையில்லா மடிக்கணினி வழங்கும்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள்.  அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து இன்னும் பல்வேறு திட்டங்களை மாணவ/மாணவிகளுக்கு செயல்படுத்திவருகிறது.   

 தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதுஸ்மார்ட்   வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதுபாடத்திட்டங்களும் விரைவில் மாற்றி அமைக்க   நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஅரசு பள்ளிகளில்  சிறந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுமாணவ/மாணவிகளுக்கு சிறந்த கல்வியினை வழங்கி வருகிறார்கள்தலைசிறந்த மாணவ/மாணவியர்களையும் உருவாக்கி வருகின்றனர்இப்பள்ளிமாணவிகள் அனைவரும் சிறப்பாக கல்வி பயின்றுபள்ளிக்கும்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென தெரிவித்தார்.

 விழாவில்மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது-


தமிழக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறதுகடந்த 2015-2016ம் ஆண்டில்திருநெல்வேலி   மாவட்டத்தில்  23870 மாணவமாணவிகளுக்கு ரூ.35 கோடிய 56 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான   விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 2016-2017ம் ஆண்டில்    25152 மாணவ,   மாணவிகளுக்கு ரூ.31 கோடிய 18 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான விலையில்லாமடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறதுகல்லணைமாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  584 மாணவிகளுக்கு ரூ.72.42 இலட்சம் மதிப்பிலானமடிக்கணினிகள் வழங்கப்படுகிறதுமடிக்கணினி மூலம் உலக அறிவை பெருக்கி கொள்ள வேண்டும்போட்டித் தேர்வுகளுக்கு தயார்  செய்து கொள்ளவும் மடிக்கணினி பயன்பெறும்தற்போது பல்வேறு  நிறுவனங்கள் வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் போது அடிப்படை கணினி  பயிற்சி உள்ளதா என்பதை கேட்கின்றனர்தமிழக அரசின் மூலம்    சீருடை,   புத்தகம்சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்படுகிறதுதமிழக அரசு வழங்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி சிறப்பாக கல்வி பயில வேண்டும்சிறந்த குறிக்கோள்களை ஏற்படுத்தி அவற்றினை அடைய முழு   முயற்சியினை  மேற்கொள்ள வேண்டுமென பேசினார்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


No comments:

Post a Comment