திருநெல்வேலி மாநகராட்சி
கொக்கிரக்குளம் அருள்மிகு காசிவிஸ்வநாத சமேத விசாலாட்சி திருக்கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி
நடைபெற்றது.
கந்தசஷ்டியை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி கொக்கிரக்குளம் அருள்மிகு
காசிவிஸ்வநாத சமேத விசாலாட்சி திருக்கோவில் சுவாமிக்கு காலையில் சிறப்பு அலங்கார
தீபாராதனை நடைப்பெற்றது. மாலையில் சுப்பிரமணியசுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி
கஜமுகநாதன், சிங்கமகாசூரன்,
சூரபத்மன், ஆகியோரை வதம்
செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் ஏற்பாட்டினை திருக்கோவில்
தர்மகர்த்தா ராமலெட்சுமி, மற்றும் கோவில் அர்ச்சகர் கணேஷன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment