தச்சை வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ
பள்ளியின் சார்பாக இளைஞர்களின் எழுச்சி நாயகனான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
அவர்களின் பிறந்ததினத்தை அவரின் திருவுருவப்படத்திற்கு பள்ளி மாணவ மாணவியர்கள்
பெற்றோர்கள் திரளாக நின்று மலர்தூவி வணங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்
செந்தில்பிரகாஷ், இயக்குநர் திலகவதி ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக
ஹரிகிருஷ்ணன், டாடா கோல்டு, திருநெல்வேலி அவர்கள் கலாம் படத்திற்கு மலர்தூவி மரியாதை
செலுத்தினார். அதனை தொடர்ந்து கலாமின் கனவான 2020-ல் இந்தியா வல்லரசு என்பதை
பெற்றோர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் அதில்
பெற்றோர்களிடம் வினாக்கள் தொடுக்க அதற்கு பெற்றோர்கள் உணர்ச்சி பொங்க தங்கள்
விடைகளை அளித்தனர் அதனோடு இல்லாமல் மாணவர்களை பெற்றோர்கள் பெரிதும் ஊக்கப்படுத்தி
கலாம் அவர்களின் கனவினை வருங்கால சந்ததியாளர்கான நீங்கள்தான்
சாதித்துக்காட்டவேண்டும் அதற்கு நாங்களும் உங்களுடன் துணை நிற்போம் என்று உறுதி
மொழி ஏற்றனர்.
இவ்விழாவில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி, மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர்
முருகேஸ்வரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment