ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி
சார்பாக புதூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம்.
சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக்
கல்லூரியின் சார்பாக புதூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி
முதல்வர் திரு.மணிமாறன் முன்னிலை வகித்தார். டெங்கு விழிப்புணர்வு முகாமை ஊர் நிர்வாகிகளான
திரு.பால்ராஜ், திரு.நடராஜன் மற்றும் திரு.மாரிபாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் SCAD Project Development Officer திரு.முருகன் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் வராமல்
தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினர். மேலும் நிலவேம்பு குடிநீரை தினமும்
காலையிலும்,
மாலையிலும் 30 மில்லி லிட்டர் வீதம் வெறும் வயிற்;றில் மூன்று வாரங்கள் தொடர்ந்து குடித்தால் டெங்கு மற்றும்
வைரஸால் பரவக்கூடிய காய்ச்சலை எளிதில் தடுத்து விட முடியும். காய்ச்சலால் பாதித்தவர்கள்
மட்டுமல்லாது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிலவேம்பு குடிநீரை பருகி
வந்தால் நல்ல பயன் கிடைக்கும். இதன் தொடர்ச்சியாக அனைத்து இடங்களையும் மாணவர்கள் சுத்தம்
செய்தனர்.
இம்முகாமின் அனைத்து ஏற்பாடுகளை
SCAD Project ஒருங்கிணைப்பாளர் திருமதி.பார்வதி மற்றும் திருமதி.மஞ்சுளா
ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் திரு.கலைக்கோ, பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி
திரு. ஆரோக்கியராஜ் பொது மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment