திருநெல்வேலி, பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில்
சிறைத் துறை மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து 1008 மரக்கன்று நட்டு பராமரித்தல் பணிகள்
துவக்க நிகழ்ச்சி இன்று (14.10.2017) நடைபெற்றது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப.,
அவர்கள்
துவக்கி வைத்து, மரக்கன்றுகளை
நடவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
பேசியதாவது-
திருநெல்வேலி மாவட்டத்தில், மரம் நடும் நிகழ்ச்சிகள் தமிழக அரசு
மற்றும் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு
அமைப்புகளின் மூலம் நடைபெற்று வருகிறது. மரக்கன்றுகளை நடவு செய்து குறைந்தது
ஓராண்டாவது பராமரிப்பு செய்திட வேண்டும். தற்போது மரக்கன்றுகள் சிஆர்ஏ என்ற புதிய
முறையில் நடவு செய்வதன் மூலம் குறைவான தண்ணீரை உபயோகித்து மரக்கன்றுகளை வளர்க்க
முடியும். கடந்த ஆண்டு நமது மாவட்டத்தில் வறட்சி அதிகம் இருந்தது. எனவே, புதிய
முறையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.க.இளம்
பகவத், மத்திய
சிறைச்சாலை கண்காணிப்பாளர் திரு.ஜி.பி.செந்தாமரைக்கண்ணன், பாளையங்கோட்டை வட்டாட்சியர்
திரு.தங்கராஜ், கிராம
உதயம் நிறுவனர்/இயக்குநர் மரு.வி.சுந்தரேசன், கிராம
உதய பகுதி பொறுப்பாளர் திரு.சேகர், வழக்கறிஞர் திரு.புகழேந்தி தன்னார்வ
தொண்டர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment