நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியைச் சார்ந்த
700
க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மத்திய அரசின் “தூய்மை
சேவை” திட்டத்தின் கீழ் ஒரே நாளில் நெல்லை நகரைச் சுற்றியுள்ள
ஆறு கிராமங்களில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
இப்பணியினை கல்லூரி முனைவர் முதல்வர் வி.இளங்கோவன்
துவக்கி வைத்தார். தூய்மை சேவை பணிகளை மேற்கொள்வதன் பயன்பாடுகள் குறித்து ஸ்காட் கல்விக்
குழுமங்களின் செயல் இயக்குநர் திருமதி மெனான்டஸ் மற்றும் பொது மேலாளர் (நிதி) திரு.இக்னேஷியஸ்
சேவியர் மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்தனர். இதில் குறிப்பாக நெல்லை பேட்டை நரிக்குறவர்
மற்றும் தொழுநோயாளிகள் இருப்பிடங்களையும் மாணவ மாணவியர் தன்னார்வத்துடன் சுத்தம் செய்ததோடு அவர்களுடைய வீடுகளை
சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொண்டனர்.
மேலும் இப்போது தீவிரமாக
பரவிவரும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறித்தும்
தெளிவு படுத்தினர். இப்பணிகளுக்கான ஏற்பாடுகளை
கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு.எஸ்.கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக
செய்திருந்தனா.

No comments:
Post a Comment