திருநெல்வேலி
ரோட்டரி சங்கத்தின் 75வது பவளவிழா
ஆண்டின் துவக்க விழா பாளையம்கோட்டை குலவணிகர்புறம் ஐ ஜி எஸ் கன்வென்ஷன் சென்டரில்
நடைபெற்றது.
விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் சங்க தலைவர் சொக்கலிங்கம்
வரவேற்றார். நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி ரோட்டரி சங்க பவள விழா கொண்டாட குழு
கமிட்டி தலைவர் மெல்கியோ தலைமை தாங்கினார். வருங்கால தலைவர் பரமசிவன், உதவி ஆளுநர் யூசுப்
ராஜா,முன்னாள் தலைவர்கள் ஜெரால்டு செல்வராஜ் ,
ஜனார்த்தனன், தனிஷ்க் ஹரி கிருஷ்ணன் மற்றும் பூர்ணலிங்கம்
முன்னிலை வகித்தனர்.
பவள விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீலங்காவை
சேர்ந்த அகில உலக ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கே ஆர் ரவீந்திரன் கலந்து கொண்டு
பவள விழா நினைவாக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அமையயுள்ள ரோட்டரி
கடிகார கோபுர மாதிரி மற்றும் அதன்
அடிக்கல் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து பவள விழா மலரை அவர்
வெளியிட ரோட்டரி ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா பெற்று கொண்டார்.
கே ஆர்
ரவீந்திரன் சிறப்புரையாற்றுகையில் ,"இன்று
உலக அளவில் ரோட்டரி சங்கங்கள் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றிவருகிறது. சேவையாற்றுதல் என்பது இறைவனுக்கு தொண்டு
புரிவதை போல . அதைத்தான் மஹாத்மா காந்தி மற்றும் புனிதர் அன்னை தெரசா ஆகியோர்
செய்தனர். அதை போல் ரோட்டரி இயக்கமும் உலக அளவில் ஏராளமான பொது சேவைகளை செய்து
வருகின்றது. ரோட்டரி சங்கத்தினர் தன்னலமற்ற சேவையாற்ற தன்னை தயார்படுத்தி
கொள்ளவேண்டும .இன்று உலக அளவில் போலியோ நோயை ஒழித்ததில் ரோட்டரி சங்கம் பெரும்
பங்கு வகிக்கிறது . இதனை கருத்தில் கொண்டு
ஏழை எளியோர்க்கு ரோட்டரி
சங்கத்தினர் சேவை புரிய வேண்டும் என
பேசினார்.
நிகழ்ச்சியில் 3212
மாவட்டமுன்னாள் ரோட்டரி ஆளுனர் கணபதி,
ஆளுநர் தேர்வு ராஜகோபாலன்,வருங்கால ஆளுநர் ஷேக் சலீம் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். இதனை அடுத்து திருநெல்வேலி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும்
நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதன்மை கொடையாளராக (மேஜர் டோனர்)
மெல்கியோ அவர்கள் ரோட்டரி பவுண்டேசனுக்கு நிதியினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்
முன்னாள் ஆளுனர்கள் , முன்னாள் உதவி
ஆளுநர்கள், பல்வேறு பகுதி
சங்க தலைவர்கள்,செயலர்கள் மற்றும்
உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான
ஏற்பாடுகளை பவள விழா கமிட்டியினர்
மெல்கியோ தலைமையில் சொக்கலிங்கம்,,
ஆவுடையப்ப குருக்கள், ஜெரால்டு ,பரமசிவன்,சங்கரசுப்பு, மனோவ ராஜா ,சரவணன் மாணிக்கம், புகழேந்திரன் கமாக் , குணசீலன், அந்தோணி,
விவேக்
உள்பட பலர் செய்து இருந்தனர்.
நிறைவாக பவள விழா
கமிட்டி துணை தலைவர் தனிஷ்க் ஹரி
கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.


No comments:
Post a Comment