நெல்லை அபயம் மறுவாழ்வு மையத்தின் 10ம் ஆண்டு நிறைவு
விழா பாளையங்கோட்டை, குலவணிகர்புரத்தில் உள்ள அபயம் அரங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அபயம் மாணவர்கள் தமிழ்தாய் வாழ்த்து பாடல்களுடன் துவங்கியது.
திருநெல்வேலி அன்னை ஹாஜிரா கல்லூரி தலைவர் செய்யது அகமது, அபயம் அப்துல்கபூர்
தலைமையில் ஆண்டறிக்கை வாசித்தார். காஜா எண்டர்பிரைசஸ்ஸின் இணை நிர்வாக இயக்குநர்
அப்துல் அஜீஸ் அறிமுக உரையாற்றினார். காஜா எண்டர்பிரைசஸ் இயக்குநர் அன்வர் ஹ§சேன் முன்னிலை
வகித்தார். புஷ்பலதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் புஷ்பலதா பூரணன் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு விழா பேரூரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் நிறைவு விழாவில்
வாழ்த்தி பேசினார். அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுபாஷ்சந்திரன், மருத்துவக் கல்லூரி
மருத்துவர் ராஜசேகரன், மருத்துவர்கள் அப்துலுரகுமான், சங்கரநாராயணன், சுந்தரபாண்டியன்
ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிறைவாக அபயம் மறுவாழ்வு மையத்தின்
மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.

No comments:
Post a Comment