மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 13 October 2017

தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி சார்பாக நெல்லையை தூய்மைப்படுத்தும் பணி




தச்சை வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி சார்பாக நெல்லையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றன. வேகமாக பரவி வரும் டெங்கு என்னும் கொடிய நோய்களின் பிடியிலிருந்து மக்கள் மீளவேண்டியும், நாம் வாழும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தும் நிகழ்ச்சி தச்சை வேதிக் பள்ளி சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை பள்ளித்தாளாளர் செந்தில் பிரகாஷ் மற்றும் இயக்குநர் திலகவதி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

பள்ளி மாணவர்கள் பல குழுக்களாக சென்று நெல்லையின் முக்கிய வீதிகளில் சென்ற டெங்கு எவ்வாறு பரவுகிறது அதனை நாம் எவ்வாறெல்லாம் தடுக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவர்கள் தெருக்களில் உள்ள கொசு உண்டாகும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். பள்ளி மாணவ மாணவியர்கள் தூய்மைப்பணியில் ஈடுபடுவதை கண்ட பொதுமக்கள் தாங்களும் மாணவர்களோடு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மாணவர்களை வெகுவாக பாராட்டினார்கள். 


இவ்விழாவில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி, மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment