மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 13 October 2017

திசையன்விளையில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி




நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிப்பட்டனர். அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒரு மழை கூட பெய்யவில்லையே என்று விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர். 

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே திசையன்விளையில் வெயில் வாட்டி வதைத்தது. மதியம் 12.45 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் ஒன்று கூடின. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 1.30 மணிவரை சுமார் 45 நிமிடங்கள் இந்த பலத்த மழை பெய்தது. மழை காரணமாக திசையன்விளையில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும் திசையன்விளை வடக்கு பஜாரில் மழைநீர் தேங்கி கிடந்தது. வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தை வளாகம் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இந்த மழையால் திசையன்விளை, உவரி, மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் இதமான சூழல் நிலவியது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதேபோல், இட்டமொழி, பரப்பாடி, விஜயநாராயணம் ஆகிய பகுதிகளிலும் நேற்று மதியம் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.   இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


No comments:

Post a Comment