மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 12 October 2017

எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை




                அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் கல்லூரிகளுக்கிடையிலான மண்டல அளவில் தடகளப் போட்டி மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிகளில்
தடகளப் போட்டியில் வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
                 
         இதில் வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி ஆண்கள் பிரிவில் மாணவர் நாராயணன் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தையும், மாணவர் ஐயப்பன்   400 மீட்டர் தடைதாண்டும் போட்டியில்; தங்கப்பதக்கத்தையும்,  நீளம் தாண்டுதலில் ஜெஸ_ ஆண்டனி ரிபூ தங்கப்பதக்கத்தையும், மாணவர் அஜீத் திலீப்பன் 10000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் மற்றும் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கததையும், மாணவர் வெங்கடேஷ்  அதே போட்டியில்; வெண்கலப் பதக்கத்தைப் பெற்று ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்;.  பெண்கள் பிரிவில் மோனிஷா 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் மற்றும் வெனிஷா வெங்கடேஸ்வரி நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

                                வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களையும் வீராங்கணைகளையும் ஸ்காட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் எஸ்.கிளிட்டஸ் பாபு, ஸ்காட் கல்வி குழுமங்களின் செயல் இயக்குநர் திருமதி மெனான்டஸ், பொதுமேலாளர் திரு.இக்னேஷியஸ் சேவியர். கல்லூரி முதல்வர் முனைவர் வி.இளங்கோவன். நிர்வாக அதிகாரி திரு.எஸ்.கிருஷ்ணகுமார், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியரைப் பாராட்டினர்.

















No comments:

Post a Comment