மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 6 October 2017

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம்




                பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்களுக்கான ஒரு நாள் சிறப்பு மருத்துவ முகாம் (04.10.2017) கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் முகாமைத் துவக்கி வைத்தார். 


                சிறப்பு விருந்தினர்களாக செலின் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் காசியம்மாள் துரைராஜ், மாக்னம் டென்டல் இயக்குநர் மருத்துவர் அனிதா சதிஷ், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மேலாளர் திரு என். பிரபு, மாக்னம் டென்டல் நிர்வாக இயக்குநர் பொறியாளர் எம். சதிஷ் செல்வகுமார் மற்றும் துளசி மருந்தகத்தைச் சார்ந்த திரு. ஆழ்வார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இம்முகாமில் கண், பல், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்றது. முகாமில் கல்லூரி அரசுதவிபெறாப் பாடப்பிரிவு இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் அவர்கள் உட்பட நூற்றுக்கான பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 



             நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவர்கள்  பேரா. அப்துல் காதர் முஹைதீன், பேரா. சாகுல் ஹமீது, பேரா. ஜெஸ்லின் கனக இன்பா, பேராசிரியை ஜே. ஜெமி மெர்லின் ராணி, பேரா. பிரேமலதா, பேரா. முகம்மது யஹ்யா ஆகியோர் செய்திருந்தனர். 

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.


No comments:

Post a Comment