மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday 13 October 2017

டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆட்சியர் ஆய்வு.



திருநெல்வேலி மாநகராட்சி என்ஜிஓ காலனி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி அவர்கள் இன்று (14.10.2017) வீடு, வீடாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

திருநெல்வேலி மாநகராட்சி என்ஜிஓ காலனி சுடலைகோவில் அருகில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும், டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்களிடம் கொசு புழு ஒழிப்பு அபேட் திரவம் பயன்படுத்துவது தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் வீடு, வீடாகச் சென்று கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பது தொடர்பாகவும் அறிவுரைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, ராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 


அங்கு, தெருக்களில் உள்ள குப்பைகளை மாஸ் கிளினிங் மூலம் உடனடியாக அகற்றிடவும் பயன்பாடற்று அடுக்கி வைக்கப்பட்டுள்ள டயர்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் புதிய கட்டடங்களை கட்டும் கட்டுமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அபாரதம் விதிக்கவும் உத்தரவிட்டார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க, 15 தினங்களுக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை 6.00 மணி முதலே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர். வீடு, வீடாக சென்று அபேட் மருந்து ஊற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 2000 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 வீடுகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிக,மிக அவசியமாகும். வீடுகளில் கொசு உற்பத்தி ஆகா வண்ணம் சுத்தமான பராமரிப்பு செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் கொசு உற்பத்தி ஆகா வண்ணம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை கட்டட நிறுவனங்கள் செய்ய வேண்டும். அலட்சியமாக உள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்கப்படும். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கொசு ஒழிப்பு பணியாளர்கள் கூறும் விழிப்புணர்வுகளை பின்பற்றி திருநெல்வேலி மாவட்டம் டெங்கு இல்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தெரிவித்தார்.

ஆய்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.க.இளம் பகவத்,இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் (பொ) திரு.நாராயணநாயர், மேலப்பாளையம் உதவி ஆணையர் திருமதி.கவிதா, மாநகர நல அலுவலர் மரு.பொற்செல்வன், சுகாதார அலுவலர் திரு.சாகுல்ஹமீது, உதவி செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, மருத்துவ அலுவலர் திருமதி.ரமா ரமேஷ், வட்டாட்சியர் திரு.தங்கராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment