மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 2 December 2017

புவியைக் காக்க இளையோரின் குரல் வினாடி வினா போட்டிகள்




பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி  தாவரவியல் துறை  சார்பில்  புவியைக் காக்க இளையோரின் குரல் என்னும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள்  தூய சவேரியார்  கல்லூரி வளாகத்தில் உள்ள XIBA கலையரங்கில் வைத்து நடைபெற்றது . 

பாளையங்கோட்டை  தூய சவேரியார் கல்லூரி முதல்வர் , அருள்தந்தை முனைவர் V. பிரிட்டோ, சிறப்புரை ஆற்றினார்.  திருநேல்வேலி முதன்மை கல்வி அலுவலர் தனமணி தலைமையுரை வழங்கி சிறப்பித்தார். 


பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி  ஓய்வு பெற்ற விலங்கியல் துறை   இணைப் பேராசிரியர்கள் நாராயணன் ,  மற்றும் முனைவர் டங்க்ஸ்டன் அம்புரோஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மாவட்ட சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு  சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கினார்.  அதனை தொடர்ந்து மதியம் மாணவர்களுக்கு  வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது .  

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.


No comments:

Post a Comment