பாளையங்கோட்டை மறைமாவட்டம் தூய சவேரியார் பேராலய திருவிழா முதல் நாளான (24.11.2017) அன்று கோடியேற்றத்துடன் துவங்கியது . மேலும் (28.11.2017) ஐந்தாம் திருநாள் திருவிழா திருப்பலி காலை 6.00 மணிக்கு நடைபெற்றது.
அருட்திரு . மோட்ச ராஜன் (திருநெல்வேலி சமூக சேவை சங்கம்) அவர்கள் திருப்பலி மற்றும் மறையுரையினை வழங்கினார் . தூய வியாகுல அன்னை கலைமனைகள் திருபயணிகலாக வருகை தந்தனர்.
மேலும் மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற திருவிழா திருப்பலியினை கோவில்பட்டி பங்குத்தந்தை அருட்திரு . A. பீற்றர் சிறப்பித்தார். நாலாங்கட்டளையை சார்ந்த பங்குத்தந்தை அருட்திரு . ஜெகன் ராஜா அவர்கள் மறையுரையினை வழங்கி சிறப்பித்தார். ஓசேயா மண்டலம் சபையைச் சார்ந்த இறைமக்கள் இத்திருப்பலியினை சிறப்பித்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு. சரவணவேல்.
No comments:
Post a Comment