திருநெல்வேலி மத்திய ரோட்டரி சங்கம் மற்றும் இன்னர்வில் கிளப் ஆப் திருநெல்வேலி இணைந்து பெண்களுக்கான pink 2017 புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக காவல்துறை உதவி ஆய்வாளர் சுகுணாசிங் ரோட்டரி கவர்ணர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா இன்னர்வில் சேர்மன் வெயிலா K. ராஜா அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி சுத்திய முனைவரா ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் யூசுப்ராஜா , முன்னாள் உதவி ஆளுநர் மயில் பால சுப்பிரமணியன், இன்னர்வில் தலைவி பாரதிரவி, செயலாளர் கோமதி மாரியப்பன் , மத்திய ரோட்டரி சங்க தலைவர் உலகராஜ் , செயலாளர் சரவணன் Pink 2017 நிகழ்ச்சி இயக்குநர் AVL துரைகுமார் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர் இன்னர்வில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .
கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபுத்திரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு. சரவணவேல்.




No comments:
Post a Comment