அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பாக
நெல்லையில் வரும் அக்டோபர் 2018ல் 12நாட்கள் தாமிரபரணி நதிக்கு மஹாபுஷ்கர விழா நடைபெற உள்ளது என அகில
பாரத துறவியர்கள் சங்க செயலர் சுவாமி ராமானந்தா நெல்லையில் செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் 2018ம் ஆண்டு குரு பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்கு
குரு மாறும் பொழுது அதி தேவதையாக விளங்க கூடிய தாமிரபரணி நதிக்கு மஹாபுஷ்கர விழா
நடைபெறுகிறது இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சியாகும். (அதாவது 12ஒ12) இதை முன்னிட்டு
தாமிரபரணி நதிக்கு புஷ்கர விழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது
குறித்து சிருங்கேரி ஜெகத்குரு மஹா சன்னிதானம் 12நாட்கள் புஷ்கர விழாவை நடத்த ஆசியுரை
வழங்கியுள்ளார்.
இதனை முன்னிட்டு பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு
சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து குறிப்பாக
தென்மாநிலங்களில் இருந்து 1கோடிக்கும் மேல் பக்தர்கள் புனித நீராடுவதற்க்கான ஏற்பாடுகள்
செய்யப்படடு வருகிறது. இந்த விழாவில் சங்கராச்சாரியார்கள், ஆதினங்கள், மடாதிபதிகள், துறவிகள், என நாட்டின்
பல்வேறு பகுதியில் இருந்து வருகை தர உள்ளார்கள்.
இதனையொட்டி துறவியர்கள் மாநாடு, ஊர்வலம், சதுர்வேதபாராயணம், திருவாசக
முற்றோதுதல். சைவமாநாடு, நாலாயிரம் திவ்யபிரபந்த பாராயண வைணவ மாநாடு, போன்றவைகள் 12நாட்கள் தாமிரபரணி
நதி படித்துறைகளிலும் மஹா ஆரத்தி,
கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. துமிழக
அரசு தாமிரபரணிக்கு சிறப்பு செய்கின்ற விதத்தில் அரசு விழாவாக கொண்டாட முன்வர
வேண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகின்ற படித்துறைகள் அனைத்தும் சீர்
அமைத்து பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும்.
மேலும் உடை மாற்றும் அறை, கழிவறை, சிறப்பு பேருந்து மற்றும் இரயில் வசதிகளை ஏற்படுத்திடவும், பாபநாசத்தில்
தாமிரபரணி மாதாவின் திருவுருவ சிலை நிறுவ வேண்டும் என கூறினார்.
செய்தி மற்றும் படம்.
திரு.முத்து.
No comments:
Post a Comment